செய்தால், அதை தவறாகப் பயன்படுத்தி அதன் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுதுவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு.லலித் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
''எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மீது கொடுக்கப்படும் புகார்களை முறையாக விசாரிக்க வேண்டும். அந்தச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் புகாரின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாகக் கைது செய்ய தடை விதிக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் ஏதேனும் புகார்கள் வந்தால், போலீஸ் டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறைவில்லாத அதிகாரிகள் இதை விசாரணை செய்ய வேண்டும்.
மேலும், இந்த சட்டத்தின் கீழ் ஏதேனும் புகார் இருந்தால்கூட, அரசு ஊழியர்கள் முன்ஜாமீன் பெறுவதில் எந்தவிதமான தடையும் இல்லை. அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கலாம்.
எஸ்.சி.,எஸ்.டி. சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகளை கைது செய்யவேண்டுமென்ளில் முறைப்படியான ஆணையத்திடம் முன்அனுமதி பெற்றபின்தான் போலீஸார் கைது செய்ய முடியும்'' என ஆணையிட்டனர்.
Nice
ReplyDeleteCrt
ReplyDelete