புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற்றுவிட்டு, பழைய ஓய்வூதியத்
திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் எண்ணமில்லை என்று மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
மத்திய அரசுப் பணிகளில் கடந்த 2004, ஏப்ரல் 1 மற்றும் அதற்கு பிறகு
சேர்ந்தவர்கள், தேசிய ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதியத்
திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டனர். அதன்படி, தனிநபர் சேமிப்புகள் ஓய்வூதிய
நிதியத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, அந்த நிதி மத்திய அரசின் முதலீடுகளுக்கு
பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் எண்ணம் இல்லை என்றும், புதிய திட்டமே ஊழியர்களின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தார்

If state government accepted u have to pass the gpf.
ReplyDelete