சி.பி.எஸ்.இ., தேர்வில், கணிதம் மற்றும் பொருளி யல் பாட வினாத்தாள்,
'லீக்' ஆனதால், மறு தேர்வு நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., நிர்வாகம்
அறிவித்துள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும்,
பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 5ல் பொது தேர்வு துவங்கியது. 10ம்
வகுப்புக்கு, மார்ச், 12ல், ஆங்கிலத் தேர்வு நடந்தது. அப்போது,
வினாத்தாள், லீக் ஆனதாக, தகவல் பரவியது. ஆனால், சி.பி.எஸ்.இ.,
தரப்பில் மறுக்கப்பட்டது. இந்நிலையில், 26ம் தேதி நடந்த, பிளஸ் 2
பொருளியல் தேர்வு மற்றும், 10ம் வகுப்புக்கு, நேற்று நடந்த கணித
தேர்வு ஆகிய இரண்டிலும், 'வாட்ஸ் ஆப்' வழியாக, வினாத்தாள் லீக்
ஆனதாக, தகவல் பரவியது.
ஆதாரங்கள் : நேற்று முன்தினம் இரவே, புதுடில்லியில், வினாத்தாள்
லீக் ஆகி விட்டதாகவும், புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பிளஸ் 2வுக்கான,
பொருளியல் தேர்வும், 10ம் வகுப்புக்கான, கணிதத் தேர்வும், மீண்டும்
நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, கே.கே.சவுத்ரி,
நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சி.பி.எஸ்.இ., பொது தேர்வில், சில
விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததற்கான, அடிப்படை ஆதாரங்கள்
கிடைத்துள்ளன. பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் பிளஸ் 2 பொருளியல்
ஆகிய, இரண்டு பாடங்களுக்கான தேர்வுகளை, மீண்டும் நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வுக்கான தேதி, விரைவில்
அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால்,
10ம் வகுப்பு மாணவர்கள், 16 லட்சம் பேரும்; பிளஸ் 2 மாணவர்கள்,
நான்கு லட்சம் பேரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 2
மாணவர்கள் சிலர், பொருளியல் தேர்வு கடினமாக இருந்த நிலையில்,
மீண்டும் எழுதுவதால், கூடுதல் மதிப்பெண் பெற வாய்ப்பு கிடைக்கும்
என, கருதுகின்றனர்.இதை விட, கடினமான கேள்விகள் வந்தால்,
என்ன செய்வது என, சில மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்த குழப்பம், கணித தேர்வை, மீண்டும் எழுத உள்ள, 10ம் வகுப்பு
மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
பெற்றோர் எதிர்ப்பு : சி.பி.எஸ்.இ., தேர்வில் வினாக்கள், 'லீக்' ஆன
விவகாரம், மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் இடையே,
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற தவறுகள்
தொடர்வதாக, விமர்சனங்கள் எழுந்துள்ளன.சி.பி.எஸ்.இ.,
பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு கணிதம் மற்றும், பிளஸ் 2 பொருளியல்
பாடங்களின் வினாக்கள், லீக் ஆன விவகாரம், தற்போது உறுதியாகி
உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஏதாவது ஒரு பாட வினாத்தாள்,
லீக் ஆவதும், மறு தேர்வு அல்லது விசாரணை நடத்துவதும்,
சி.பி.எஸ்.இ.,யின் வாடிக்கையாக உள்ளது.இந்த ஆண்டு, மார்ச்,
12ல் நடந்த, 10ம் வகுப்பு ஆங்கில தேர்வு வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்'பில்
வெளியானதாக, தகவல்கள் பரவின. ஆனால், சி.பி.எஸ்.இ., மறுப்பு
தெரிவித்தது. இதையடுத்து, பிளஸ் 2 பொருளியல் தேர்வு, 26ல் நடந்தது.
அதற்கு முந்தின நாளில், வினாத்தாள் லீக் ஆனதாக கூறப்பட்டது.
அதையும், சி.பி.எஸ்.இ., அலட்சியம் செய்தது. ஆனால், நேற்று
நடந்த கணித தேர்வுக்கான வினாத்தாள், நேற்று முன்தினம் நள்ளிரவு,
11:00 மணி அளவில் ெவளியாயின. இந்த வினாக்கள், கைகளால்
எழுதப்பட்ட காகிதமாக, வாட்ஸ் ஆப்பில் வலம் வந்துள்ளது. அதில்,
வினாத்தாளின் எண், வினாக்கள் வரிசை முறை மற்றும் வரைபடம்
உள்ளிட்ட, அனைத்தும் இடம்பெற்றுள்ளன. புதுடில்லியில் இருந்து
தான், வினாத்தாள் கசிந்தது தெரிய வந்துள்ளது. இதனால், மறுதேர்வு
அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...