ஏர்செல் நெட்வொர்க்கை அடுத்து இந்தியாவின் பல நகரங்களில் ஏர்டெல் சேவை
பாதிப்படைந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நாடு முழுவதும் ஏர்செல் சேவை முற்றிலும் பாதிப்படைந்திருந்தது. இதனை அடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரையும் தாங்களே வேறு சேவைக்கு மாறிக்கொள்ளும்படி ஏர்செல் நிர்வாகம் அறிவித்தது. இது இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் தற்போது ஏர்டெல் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஏர்டெல் மூலம் இணையம் மட்டுமே இயங்குவதாகவும் கால் செய்வது மற்றும் கால்களைப் பெறுவதில் பிரச்னை இருப்பதாகவும கூறுகின்றனர். 4ஜி சேவை 2ஜி சேவை போல் மிகவும் மெதுவாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து விளக்கமளித்துள்ள ஏர்டெல் நிறுவனம், 'சிறிய தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது, தடங்கலுக்கு மிகவும் வருந்துகிறோம், தற்போது சேவைகள் முற்றிலும் சீரமைக்கப்பட்டுவிட்டது. ஒருமுறை மொபைல் ஃபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்தால் சீராக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...