சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நீட் தேர்வு செயலி தொடர்பான
செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய தன்னார்வ தொண்டு நிறுவன
தலைவர் ராம் பிரகாஷ், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் காணொலி மூலம்
பயிற்சி வழங்க செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது தமிழக அரசு நீட்
தேர்விற்காக பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. அதே போல சிறப்பு
வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. NGO-க்கள் சார்பாகவும் கிராமங்களில்
நீட் தேர்வு பயிற்சி சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன என்றார்.
மேலும் பேசிய அவர் ஆனாலும் இன்னும் பெரும்பாலான கிராமங்களில் அல்லது பெரும்பாலான ஊர்களில் தலைநகர் சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் உள்ளது போல நீட் தேர்வுக்கு தயாராக கூடிய வசதிகள் இல்லை என்றார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களால் ஒரு விண்ணப்பம் ரூ.1400 கொடுத்து வாங்க இயலாது என்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் எப்படி தங்கள் குழந்தைகளை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்ப முடியும் என்றார். இந்த விஷயத்தை போக்கும் வகையில் LETS ACT என்ற கான்செப்டில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...