பூமியில் இருந்து சுமார் 260 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் பூமியைப் போன்ற ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். #K2229b #EarthsizedPlanet
பூமியில் இருந்து சுமார் 260 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் பூமியைப் போன்ற ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏக்ஸ்-மார்செய்லே பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள வார்விக் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில், பூமியைப் போன்று நிறையுள்ள புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கே2-229பி (K2-229b) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகமானது பூமியை விட 20 சதவீதம் பெரிதாகவும், 2,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் கொண்டதாக இருக்கிறது. இந்த கிரகம் தனது நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் அமைந்திருப்பதால் அங்கு அதிக அளவிலான வெப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
அந்த கிரமானது தனது நட்சத்திரத்தை 14 மணி நேரத்துக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. இந்த புதிய கிரகத்தை கே2 (K2) என்ற தொலைநோக்கியின் மூலமாக கண்டுபிடித்தால், இந்த கிரகத்துக்கு கே2-229பி (K2-229b) என்று பெயரிட்டுள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...