உடலும் மனமும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உணவு முக்கியம். (உண்டபின்
களைப்பைத் தாண்டி) சுறுசுறுப்பாக இருக்க சில வழிமுறைகளைக் கையாண்டால்
என்றும் ஆரோக்கியமாக வாழலாம்.
ஆரோக்கியமான உணவு உண்ண சில திட்டங்கள் :
ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு உண்ணுங்கள். உணவுகளை --விசேஷமாகக் காலையுணவைத் தவிர்க்காதீர்கள்.
உணவு வேளைகளுக்கிடையில் உங்களுக்குப் பசித்தால், யோகெட் மற்றும் பழம், நறுக்கப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகள், அல்லது முழுக்கோதுமையால் செய்யப்பட்ட கிராக்கர்கள் மற்றும் சீஸ் போன்ற ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியை உண்ணத் திட்டமிடுங்கள். 1 முதல் 3 ஆரோக்கியமான சிற்றுண்டிகள் போதுமானவையாகும்.
வீட்டுப்பாடம், தொலைக்காட்சி, மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்ற கவனச் சிறதல்கள் இல்லாமல் மெதுவாகச் சாப்பிடவும். அதன் மூலம், உங்கள் வயிறு எப்போது நிறைவடைகிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
அடிக்கடி வீட்டு உணவை உண்ணவும். வெளியே அடிக்கடி உணவு உண்பதைத் தவிர்க்கவும்.
அடுத்ததாக, சுறுசுறுப்பாக நம்மை வைத்துக்கொள்ள சில வழிமுறைகள் !
எல்லாக் காலநிலைகளிலும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
உடற்பயிற்சிக்கூட வகுப்புகளில் கலந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் உங்கள் தற்போதய நடவடிக்கைகளின் அளவை 30 நிமிடங்களால் அதிகரிக்க முயற்சிசெய்யுங்கள்.
உங்கள் மருத்துவர் மற்றும் ஃபிசியோதெரபிஸ்ட் ஆகியோருடன் கேட்டபின், ஒரு நாளில் 90 நிமிட செயற்பாட்டில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை கடுமையான பயிற்சி வீதம் ஒரு வாரத்துக்கு 4 முதல் 5 முறைகள் உடற்பயிற்சி செய்யவதற்கான குறிக்கோளை வைக்கவும்.
உங்களுக்குச் சலிப்பூட்டாமலிருப்பதற்காக வித்தியாசமான நடவடிக்கைகளைத் தெரிவு செய்யவும். எழுதவோ,வரையவோ செய்யலாம்.
நடத்தல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற, உங்கள் வீட்டிலிருந்து அல்லது வீட்டுக்கு அருகாமையிலிருந்து செய்யக்கூடிய சில நடவடிக்கைகளைத் தெரிவு செய்யவும்.
நீங்கள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் விளையாடும் நேரத்தை, ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவானதாக மட்டுப்படுத்தவும். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வீதமாகக் குறைத்துக்குக்கொள்ளத் தொடங்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...