நாகப்பட்டினம், நாகையில், அரசு துவக்கப் பள்ளியில், கிராம மக்கள் முயற்சியால், 'ஏசி' வகுப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது.
நாகை, அக்கரைப்பேட்டை டாடா நகரில், ஊராட்சி துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம்வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில், மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தன்னிறைவு திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. கிராம மக்கள் பங்களிப்பாக 1.50 லட்சம் மற்றும் அரசு நிதியாக மூன்று லட்சம் என, 4.50 லட்ச ரூபாய் மதிப்பில், இவை அமைக்கப்பட்டன.மேலும், கிராம மக்கள் சார்பில், 10 லட்ச ரூபாய் செலவில், பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்கள், அனைத்து வகுப்பறைகளுக்கும், 'லேப்டாப்' மற்றும் ஒரு வகுப்பறைக்கு குளிர் சாதன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சுரேஷ்குமார் பங்கேற்று, ஸ்மார்ட் வகுப்புகளையும், 'ஏசி' வகுப்பறையையும் துவக்கி வைத்தார்.
Super
ReplyDelete