அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்திற்கான
டெண்டர் விதிமுறைகளைத் தளர்த்த அரசுக்கு உத்தரவிடச் சென்னை உயர் நீதிமன்றம்
மறுப்புத் தெரிவித்துள்ளது.
2005-2006ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் அரசின் இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் 6 லட்சம் சைக்கிள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டது. இதற்கு விண்ணப்பித்த ஹீரோ சைக்கிள்ஸ், நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யப்படவில்லை என அதன் டெண்டர் நிராகரிக்கப்பட்டது.
சைக்கிளில் பெல் மற்றும் தமிழக அரசு முத்திரை இடம்பெறவில்லை என்ற காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஹீரோ சைக்கிள் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறிய அளவிலான நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளித்து டெண்டர் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த, வழக்கை இன்று (மார்ச் 23) விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, தொழில்நுட்ப தகுதி சிறியதாக இருந்தாலும் விலக்களிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர். இதுபோன்று ஒரு நபருக்கு விலக்கு அளித்தால், ஒரு தரப்பு சார்பாக அமைந்துவிடும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
Eppada cycle tharuvinga 😤😤
ReplyDelete