தமிழகத்தில் விரைவில் அஞ்சல் துறையுடன் வங்கி சேவை தொடங்கப்படும் என நேற்று (மார்ச் 10) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 1,56,000 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில் 94 தலைமை அஞ்சல் நிலையங்கள் உட்பட மொத்தம் 12,185 தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அஞ்சல் நிலையங்களில் வங்கி சேவைகள், ஏடிஎம் வசதி, பாஸ்போர்ட் பெறும் வசதி போன்றவை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அஞ்சல் துறையில் தனியார் வங்கி போல் சேவை ஒன்று தொடங்கப்படும் எனத் தமிழக தலைமை அஞ்சல் வட்டத்தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார். சித்தாலப்பாக்கத்தில் 600131 என்ற புதிய பின்கோடுடன் நேற்று துணை அஞ்சலகம் திறப்பு விழா நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் அஞ்சலகத்தைத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு தலைமை அஞ்சல் வட்டத் தலைவர் சம்பத்,“இந்தியாவில் 8,500 பேருக்கு ஒரு அஞ்சலகமும், தமிழகத்தில் 6,000 பேருக்கு ஒரு அஞ்சலகமும் உள்ளது. அஞ்சல் துறையில் வங்கி சேவை போன்று மாநிலம் முழுவதும் 37 இடங்களில் புதிதாக ஒரு சேவை தொடங்கப்படவுள்ளது, இதில் கடன் வசதி தவிர மற்ற அனைத்து சேவைகளும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பழிப்பைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், 50 ரூபாய் செலுத்தி தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். அதன்படி, பாஸ் புக், ஏடிஎம், கார்டு பெற்று, பண பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளலாம். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம், கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் தபால் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் சர்வீஸ் சார்ஜ் கிடையாது என்று 2017ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...