ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிக்கு நேரடி பணி நியமனம் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மெரீனாவில் திங்கள்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை மெரீனா காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்துக்கு மாற்றுத்திறனாளி பெண்கள் 36 பேர் உள்பட 98 பேர் வந்தனர். இவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். பின்னர் அலுவலக நுழைவு வாயில் எதிரில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மெரீனா போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தை இரவும் தொடர்ந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...