குரங்கிணி மலைப்பகுதியில் காட்டுத்தீ
குரங்கிணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், இரவில் மீட்புப்பணி மேற்கொள்வது கடினம், பணி ஹெலிகாப்டர் மூலம் தொடர்ந்து நடைபெறும். காட்டுப்பகுதியில் தீப்பிடித்த இடங்களை ஆய்வு செய்தபின் மீட்பு பணிகள் துரிதமாக நடக்கும். மருத்துவக்குழுக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். அருகில் உள்ள தனியார் தேயிலை தோட்ட ஊழியர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மாணவிகளின் விவரம்
காட்டுத்தீயில் சிக்கிய பெண்கள் சென்னை மலையேறும் குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சில பேர் ஐ.டி. ஊழியர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை 27 பேர் தேனி அருகே உள்ள கொழுக்குமலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இன்று மாலை திரும்பியிருக்க வேண்டியவர்கள் காட்டுத்தீயில் சிக்கினார்.
காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளது. அவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திவ்யா, மோனிஷா, ரேணு, பார்கவி, சிவசங்கரி, விஜயலக்ஷ்மி, இலக்கியா, சஹானா, சுவேதா, அகிலா, ஜெயஸ்ரீ, லேகா, நிவ்யா, நிவேதா, சாரதா, அணு, ஹேமலதா, புனிதா, சாய் வசுமதி, சுபா ஆகிய 20 பேர் மலையேறும் பயிற்சி மேற்கொள்ள குரங்கிணிக்கு சுற்றுலா வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களில் மோனிஷா, பூஜா, சஹானா, லேகா, ரேணு, விஜயலக்ஷ்மி, நிவேதா, சாரதா ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயில் சிக்கியிருந்தவர்களில் 12 பேர் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட 12 பேரும் திருப்பூரைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது 12 பேரும் காட்டுத்தீயில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 12 பேரில் 3 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்றுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர்
குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை முடுக்கிவிட வனத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். வனத்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் தீ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார். மேலும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மீட்புப்பணியில் விமானப்படை
காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க கோவையில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 2 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவின் பேரில் மாணவிகளை மீட்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. தமிழக முதல்வரின் வேண்டுகோளையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
25க்கும் மேற்பட்டோர் மாயம்
கொழுக்குமலை என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 25க்கும் மேற்பட்ட மாணவிகள் சிக்கியுள்ளனர். மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட போது கல்லூரி மாணவிகள் காட்டுத்தீயில் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயில் சிக்கித் தவிக்கும் மாணவிகளை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவிகள் சென்னை, ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...