சென்னை பல்கலையின், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான, தேர்வு முடிவுகள், வரும், 31ம் தேதி வெளியிடப்பட உள்ளன.
சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., -
எம்.எஸ்சி.,யில், ஐ.டி., பிரிவு ஆகிய படிப்புகளுக்கு, டிச., 2017ல் தேர்வு
நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவுகள், வரும், 31ம் தேதி வெளியிடப்படும் என,
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். அவர்
வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தேர்வு முடிவுகளை, www.ideunom.ac.in என்ற,
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 'மறு மதிப்பீடுக்கு, ஏப்., 2 முதல், 10
வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும். ஒரு தாள் மறு மதிப்பீடுக்கு,
1,000 ரூபாய் கட்டணம்' என, தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...