ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கு புதன்கிழமை (மார்ச் 7) முதல் ஏப்ரல் 13 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஜிப்மர் புதுச்சேரி கிளையில் 150, காரைக்கால் கிளையில் 50 என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப தனியாக அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து ஜிப்மர் கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன்
(www.jipmer.puducherry.gov.in) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு மார்ச் 7 -ஆம் தேதி காலை 11 முதல் ஏப்ரல் 13 -ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மே 21 -ஆம் தேதி முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜூன் 3 -ஆம் தேதி எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு இரு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவுக்கு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், 2 -ஆம் பிரிவுக்கு பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 20 -ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்.
புதுவை ஜிப்மரில் உள்ள 150 இடங்களில் 40 இடங்கள் புதுவை மாநிலத்துக்கு ஒதுக்கப்படும். மற்றவை அகில இந்திய ஒதுக்கீடு ஆகும். காரைக்கால் ஜிப்மரில் உள்ள 50 இடங்களில் புதுவை மாநிலத்துக்கு 14 இடங்களும், மற்றவை அகில இந்திய ஒதுக்கீடாகவும் இருக்கும். மொத்தம் 54 இடங்களுக்கு புதுவைக்கு ஒதுக்கப்படும்.
இட ஒதுக்கீடு விவரம்: பொதுப் பிரிவு - 74, ஓபிசி பிரிவு - 37, எஸ்சி பிரிவு - 20, எஸ்டி பிரிவு - 9, புதுவை மாநில ஒதுக்கீட்டில் பொதுப் பிரிவு - 31, ஓபிசி பிரிவு - 13, எஸ்சி பிரிவு - 6, எஸ்டி - 4, வெளிநாடு வாழ்வு இந்தியர் பிரிவு - 6, மாற்றுத் திறனாளிகளுக்கு 6 இடங்கள் என 200 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...