காரைக்குடி
-- பட்டுக்கோட்டை 73 கி.மீ., அகல ரயில்பாதையில் முதல் ரயில் இன்று
இயக்கப்பட உள்ளது.இங்கு அகலரயில்பாதை பணி 2012-ல் தொடங்கியது. ரூ.700
கோடியில் 255 பெரிய பாலங்கள், 14 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுஉள்ளன. கடந்த
25-ம் தேதி பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடி வரை சோதனை ரயில்
இயக்கப்பட்டது. இன்று காரைக்குடி -- பட்டுக்கோட்டை வரையில் பயணிகள் ரயில்
இயக்கப்பட உள்ளது.
காலை 10:00 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்டு 10:12-க்கு கண்ட னுார் புதுவயல், 10.25-க்கு பெரிய கோட்டை, 10:38-க்கு வாழ்ரமாணிக்கம், 11:03-க்கு அறந்தாங்கி, 11:18-க்கு ஆயங்குடி, 11:45-க்கு பேராவூரணி, மதியம் 12:13-க்கு ஒட்டங்காடு, 1:00 மணிக்கு பட்டுக்கோட்டை சென்றடைகிறது.மறு மார்க்கத்தில் 3:00 மணிக்கு கிளம்பி மாலை 6:00 மணிக்கு காரைக்குடிக்கு வந்தடைகிறது. காரைக்குடி -- பட்டுக்கோட்டை ரூ.20, பேராவூரணி ரூ.15, அறந்தாங்கிக்கு ரூ.10 கட்டணம்.----இன்று மட்டும் இயக்கப்படும் இந்த ரயில் சில நாட்களுக்குப்பிறகு தினசரி ரயிலாக இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...