சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பணிபுரியும் பெண்கள் அனைவருக்கும் விடுமுறை விடப்படுகிறது என தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத்:
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் பெண்களை கவுரவிக்கும் விதமாகவும் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பணிபுரியும் பெண்கள் அனைவருக்கும் இன்று விடுமுறை விடப்படுகிறது என தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தெலுங்கானா மாநிலத்தின் தலைமை செயலாளரான எஸ்.கே.ஜோஷி கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் மார்ச் 8-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...