உலகின் முன்னணி கணினித் தயாரிப்பு நிறுவனமான ஐ.பி.எம் மிகச்சிறிய அளவிலான சி.பி.யூ.வை வடிவமைத்துள்ளது.
கணினித் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்களும் நாளுக்கு நாள் புதுமையை முயற்சி செய்துவரும் நிலையில், உலகின் முன்னணி நிறுவனமான ஐ.பி.எம்.மும் புதிய கண்டுபிடிப்பினை அறிமுகம் செய்துள்ளது. விரல் நகத்தின் அளவை விட மிகவும் சிறிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய சி.பி.யூ.வானது 1990களில் வெளியான கணினிகளின் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகச் சிறிய கணினி என அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சி.பி.யூ.வை இன்னும் 5 வருடங்களுக்குள் பெரும்பாலான நவீன கருவிகளில் இணைத்துச் செயல்படுத்த உள்ளதாக ஐ.பி.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது. சாதாரண கணினிகளைப் போல் இதிலும் பல்வேறு செயல்களைச் செய்யும் திறன் அமைந்துள்ளது என்றும், மற்ற சிப்களை போல் இல்லாமல் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மைக்ரோசிப்களை மாற்றம் செய்து கொள்ள இயலும் எனவும் ஐ.பி.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய சி.பி.யூ. எந்தக் கணினி மாடலில் வெளியாக உள்ளது, எப்போது வெளியாகும் என்பது போன்ற தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம் நவீன கருவிகளின் விலை குறையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...