இருதய நோயாளிகளின் உடற்பயிற்சித் திறனை மேம்படுத்த பீட்ரூட் சாறு உதவுவதாக அமெரிக்க மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவ ஆய்வறிக்கையில், இருதய நோயாளிகளின் உடற்பயிற்சித் திறன் என்பது, அவர்களின் ஆயுளைக் கூட்டுவதோடு, அன்றாட நோய்த்தாக்கம் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், பீட்ரூட் சாற்றில் உள்ள டயட்டரி நைட்ரேட் என்பதன் தாக்கத்தை ஆய்வு செய்தனர். இருதய நோயாளிகள் 8 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்லப்பட்டது. பீட்ரூட் சாறு பருகினால் இத்தகைய நிலை மாறும் என்று இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிகிறது.
உலகம் முழுதும் இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில், பாதிப்பேருக்கு இருதயத் தசை திறம்படச் சுருங்கி விரியாததால் போதிய ஆக்சிஜன் ரத்தத்திற்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. இதன் காரணமாக இவர்களுக்குப் பெரும்பாலும் மூச்சிரைப்பு ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது இத்தகைய நிலைமையால் பலர் உடற்பயிற்சியையே நிறுத்திவிடுகிறார்கள்.
பீட்ரூட் சாறு பருகினால் இத்தகைய நிலை மாறும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. அதாவது பீட்ரூட் சாறு ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதால் உடற்பயிற்சியைச் சிரமமில்லாமல் மேற்கொள்ள முடியும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இருதய நோயாளிகள் பீட்ரூட் சாறு உள்ளிட்ட நைட்ரேட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் இருதயத் தசை வலுவடைகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
உடற்பயிற்சி செய்யும்போது இந்த நைட்ரேட்கள் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றம் அடைவதன் மூலம், ரத்த அழுத்தம் மற்றும் இருதய ஆரோக்கியம் ஆகியவை பராமரிக்கப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பொதுவாக நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சியில் ஈடுபடும்போது, உடலுக்குள் மேலும் ஆக்சிஜனைக் கொண்டுவர மூச்சு விடுதல் அதிகரிக்கிறது. இதற்கு பீட்ரூட் ஜூஸ் உள்ளிட்ட நைட்ரேட்கள் உதவுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் ஆஃப் கார்டியாக் ஃபெயிலியூர் என்ற இதழில் வெளியாகியுள்ளது.
லண்டன் மருத்துவக் கல்லூரியும், பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து 2013ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், தினமும் 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் உயர் ரத்த அழுத்தம் குறையும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...