சென்னை;மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, சட்டக் கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து, கல்லுாரி நிர்வாகம்
உத்தரவிட்டு உள்ளது.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், டாக்டர் அம்பேத்கர்
சட்டக் கல்லுாரி இயங்கி வருகிறது. 2008 நவ., 12ல், சட்டக் கல்லுாரி
மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.இதையடுத்து, ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற
நீதிபதி, சண்முகம்தலைமையிலான கமிட்டி, சென்னை சட்டக் கல்லுாரியை, வேறு
இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்என, தமிழக அரசுக்கு
பரிந்துரைத்தது.இதையடுத்து, காஞ்சிபுரம்மாவட்டம், புதுப்பாக்கம் கிராமம்;
திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெரும்புதுார் உள்ளிட்ட இடங்களில், புதிதாக
கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு, கல்லுாரி இடம் மாற்றம் செய்யப்படுவதாக,
தமிழக அரசு அறிவித்தது.இதற்கு, சட்டக் கல்லுாரி மாணவர்கள் எதிர்ப்பு
தெரிவித்து, பிப்., 26ல், கல்லுாரி வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று, 15வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.ஏற்கனவே,
கடந்த, பிப்., 27 - மார்ச் 7ம் தேதி வரை, கல்லுாரிக்கு விடுமுறை
அளிக்கப்பட்டது. பின், விடுமுறை, 11ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டது.மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வராத நிலையில்,
கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறையளித்து, கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டு
உள்ளது.உண்ணாவிரத போராட்டம்சட்டக் கல்லுாரி மாற்றத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்து, நேற்று, மாணவர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில்
ஈடுபட்டனர். மாணவர்களின் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை, ஐகோர்ட்
வழக்கறிஞர்கள், பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும், கையெழுத்து
இயக்கத்தையும், நேற்று துவங்கினர். 10ம் தேதியில் இருந்து, 10 மாணவர்கள்,
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...