மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து
கோரிக்கை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி எம்.பி-க்கள் கடும் அமளியில்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 13
நாட்களாக நாடாளுமன்ற அலுவல் பணிகள் முடங்கியுள்ளன. இருப்பினும்
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில்கள் தாக்கல்
செய்யப்பட்டு அவைக்குறிப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசுக்கு உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என பதிலளித்தார். மேலும் நாடு முழுவதும் சுமார் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர் என தகவல் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...