தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குநருடனான சந்திப்பு
- செய்தி துளிகள் பேரண்புக்குரிய பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்
16.03.2018 வெள்ளிக்கிழமை இன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இயக்குநர் உடனான சந்திப்பில் முன்னாள் மாநிலத் தலைவரும் தற்பொழுது STFI ன் பொதுக்குழு உறுப்பினருமான தோழர்.மோசஸ் அவர்களும், முன்னாள் பொதுச்செயலாளர் தோழர்.பாலசந்தர் அவர்களும் உடன் இருந்தனர்.
பி.லிட் தகுதி பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பி.எட் உயர்கல்விக்கு பெற்ற ஊக்க ஊதியத்தைத் திரும்ப செலுத்தும் உத்தரவு மற்றும் 7வது ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் இதுவரை செய்யப்படாமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு கீழ்நிலை அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கிட கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை இன்று (16.03.2018) தொடக்கக்கல்வி இயக்குநரகத்தில் சந்தித்து மனு வழங்கினார்கள்.
மேலும்,
தொடக்கப்பள்ளி/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகின்ற வாரத்தில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுலகத்தில் நடைபெற இருக்கிறது, விரைவில் அதற்கு உண்டான ஆணைகள் வெளியிடப்படும் என்றும் இயக்குநர் அவர்கள் நமது மாநில பொறுப்பாளர்களிடம் கூறியுள்ளார்.
⚡தோழமையுடன்;
_தோழர்.மயில்,_
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...