பல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்-ஐ இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள ஆதார் வழக்கின் தீர்ப்பு வரும் வரை வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்-ஐ இணைக்க கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆதார் கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமூக நல உதவிகளை பெறுவதற்கும் மானிய உதவி பெறுவதற்கும் மட்டுமே மத்திய அரசு ஆதார் எண்-ஐ கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக ஆதார் இணைக்க மார்ச் 31-ம் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...