அரசு
சார்பில் நடத்தப்படும், உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிக்கும் நேர்காணலில்,
ஓய்வூதியர்கள் பங்கேற்க வேண்டும் என, சென்னை மாவட்ட ஆட்சியர்,
அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் நேர்காணல், ஏப்., 2ம் தேதி முதல், ஜூன், 29ம் தேதி வரை நடக்கிறது.
தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கும் வகையில், ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதியம் வழங்கும் ஆணை, ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன், வரும், 29ம் தேதிக்குள், நந்தனம், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் உள்ள, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் முன் ஆஜராகி, உயிர்வாழ் சான்றிதழ் பெற்று, ஜூன், 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...