என்.சி.இ.ஆர்.டி.,யின், பிளஸ் ௨வுக்கான அரசியல் அறிவியல்
பாடப்புத்தகத்தில், 'குஜராத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்' என்ற
தலைப்பு, 'குஜராத் கலவரம்' என, மாற்றப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம்
உட்பட, பல கல்வி வாரியங்களுக்கு, பாடப் புத்தகங்களை, என்.சி.இ.ஆர்.டி.,
எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், தயாரித்து
வருகிறது.சி.பி.எஸ்.இ., பிளஸ் ௨வுக்கான அரசியல் அறிவியல்
பாடப்புத்தகத்தில், 'இந்திய அரசியலில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்' என்ற
தலைப்பில், ஒரு பாடம் இடம் பெற்றுள்ளது. இதில், ௨௦௦௨ல், குஜராத்தில் நடந்த
கலவரம் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. 'குஜராத்தில் முஸ்லிம்களுக்கு
எதிராக நடந்த கலவரம்' என்ற தலைப்பில், இந்த தகவல்கள், ௨௦௦௭ம் ஆண்டு முதல்
இடம் பெற்று வருகின்றன.இந்நிலையில், வரும் கல்வியாண்டுக்கான, அரசியல்
அறிவியல் பாடப்புத்தகத்தில், 'குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்'
என்ற தலைப்பு, 'குஜராத் கலவரம்' என, மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த
பாடத்தின் முதல் வரியில், 'குஜராத்தில், ௨௦௦௨ம் ஆண்டு, பிப்ரவரி - மார்ச்
மாதத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரம் நடந்தது' என,
குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது, இதில், 'முஸ்லிம்களுக்கு எதிராக' என்ற
வார்த்தை மட்டும் நீக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...