சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பைஉள்ளிட்ட இடங்களில் சமையல் எரிவாயுவின் விலையைக் குறைத்துள்ளது. இந்த அறிவிப்பு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 14.2 கிலோ எடையுடன் கூடிய மானிய விலை சிலிண்டர் டெல்லியில் ரூ.493.09 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.496.07 ஆகவும், மும்பையில் ரூ.490.8 ஆகவும், சென்னையில் ரூ.481.21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய விலையிலிருந்து டெல்லியில் 2.54 ரூபாயும், கொல்கத்தாவில் 2.53 ரூபாயும், மும்பையில் 2.57 ரூபாயும், சென்னையில் 2.56 ரூபாயும் விலை குறைக்கப்பட்டுள்ளது.மானியம் அல்லாத 14.2 கிலோ எடையுடன் கூடிய எல்பிஜி சிலிண்டர் டெல்லியில் ரூ.689 ஆகவும், கொல்கத்தாவில்ரூ.711.5 ஆகவும், மும்பையில் ரூ.661 ஆகவும் சென்னையில் ரூ.699.5 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது டெல்லியில் 47 ரூபாயும், கொல்கத்தாவில் 45.5 ரூபாயும், மும்பையில் 47 ரூபாயும், சென்னையில் 46.5 ரூபாயும் குறைந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்துக்கு 12 எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும். அதற்கும் மேல் தேவைப்படுபவர்களுக்கே மானியம் அல்லாத சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை இந்நகரங்களில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...