Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாடங்களை புரிந்துபடிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வினாத்தாள்கள் - ஆசிரியர்கள் வரவேற்பு

பாடங்களை புரிந்துபடிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தற்போது நடைபெற்றுவரும் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்சி கல்விமுறைக்கு சவால் விடும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை முயற்சி எடுத்துவருகிறது. 


நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வினாத்தாள் 
நீட் தேர்வை எதிர்கொள்வதில் அச்சம், போட்டி தேர்வுகளில் வெற்றிகளை பறிகொடுக்கும் பரிதாபம் என நீடித்து வந்த மாணவர்களின் சோகத்தை போக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி முயற்சிகளை கையாண்டு வருகிறது. அதன்படி தற்போது நடந்து வரும் 10, 11, 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் புதிய முறையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களில் இருந்தும் பாடத்தின் பின் பகுதிகளில் இருந்தும் அதிக கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அப்படி கேட்கப்பட்டது என்று இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் அறிவித்தபடி,  சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் கேட்கப்படுவதுபோல பாடத்தின் உள்பகுதிகளில் இருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. 

மாணவர்களுக்கு முழுமதிப்பெண் கிடைக்குமா?
குறிப்பிட்ட கேள்விகளை மட்டும் மனப்பாடம் செய்துவிட்டு தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் முழு மதிப்பெண் எடுப்பது இனி கடினமாக இருக்கும். பாடத்தை முழுமையாகவும், புரிந்தும் படித்துள்ள மாணவர்கள் எளிதில் விடையளிக்கின்றனர். அவர்களுக்கு இது புதிய அனுபவமாக இருப்பதாகவும், இதே முறையை அவர்கள் வரவேற்றுள்ளனர். அதேநேரத்தில் முழுமதிப்பெண் அதிக மாணவர்களுக்கு கிடைக்குமா என்ற கேள்வியை ஆசிரியர்கள் எழுப்புகின்றனர். நீட் போன்ற தேசிய அளவில் நடக்கக்கூடிய தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக மாணவர்களுக்கு இதுபோன்ற நுண்ணறிவுள்ள வினாத்தாள்கள் அவசியமானது. 

இனிவரும் அனைத்து தேர்வுகளுக்கு மாணவர்கள் மனப்பாட முறையை மறந்து புரிந்து படிக்கும் நிலைக்கு மாறவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் பாடப்புத்தகத்தை முழுமையாக புரிந்து படித்தால் எந்த தேர்வாக இருந்தாலும் எளிதாக எதிர்கொள்ளலாம் என்பதே கல்வியாளர்களின் அறிவுரையாக உள்ளது. 




5 Comments:

  1. At present the patern of question is very good.this help the students to develop their knowledge.so please avoid the encourage of grace marks .in the current 11 the public exam out of 90 marks 75 marks are asked from book back question

    ReplyDelete
  2. It will be so (i.e., Higher Order Thinking Skills = good question paper) for us teachers only. Not for students who will carry these marks for higher education. Question paper need not have a blue print but atleast the basic design in terms of difficulty level (i.e., Difficult=20%, Average=60%, Easy=20%) must be followed.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive