வினாக்கள் அனைத்தும் நேரடியாக கேட்கப்படவில்லை...
போட்டித்தேர்வு பாணியில் புத்தகம் முழுக்க படித்து புரிந்த மாணவர் விடையெழுதும் வகையில் இருந்தது...
நுட்பமாகவும் சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமைந்தது...
வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டினை கூர்ந்து கவனித்து உள்வாங்கியதை விடையளிக்கும் நிலையில் இருந்தது...
அரசால் நடத்தப்பட்ட வழங்கப்பட்ட திருப்புத்தேர்வு வினாத்தாளிலிருந்து கூட வினாக்கள் வரவில்லை..
மாதிரிவினாத்தாள் முறைப்படி யும் வினாக்கள் கேட்கப்படவில்லை...
தற்போது 11ம்வகுப்பு மாணவர்க்கு எவ்வாறு வினாத்தாள் கேட்கப்பட்டதோ அதைப்போலவே தேடி எடுக்கப்பட்டுள்ளது...
கடந்த கால வினாத்தாளிலிருந்து பெரும்பான்மையான வினாக்கள் கேட்கவில்லை..
வரிக்கு வரி பாடங்களை படித்து வினாவாக மாற்றி ,விடைகளை படிக்கும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு போல இருந்தது...
வினாத்தாள் திட்டவரைவு blue print உள்ளபடி அதற்குப்பட்ட பாடங்களிலிருந்து கேள்வி கேட்கப்பட்டது ஆனால் நேரடி மாதிரிபுத்தக வினாக்களை கேட்கமால் ,பாடப்பகுதியின் உள்ளிருந்து சிந்தித்து பதிலளிக்கும் வகையில் இருந்தது...
மொத்தத்தில் இந்த வினாத்தாள்
மிகவும் பின்தங்கிய ,திறன்குறைந்த மாணவர்க்கு கடினமாகவே இருக்கும்...
மிகவும் பின்தங்கிய ,திறன்குறைந்த மாணவர்க்கு கடினமாகவே இருக்கும்...
மனப்பாட முறையை மாற்றி , மாணவர் சுயமாக விடையளிக்கும் முறையில் கேள்வி வந்தது..
நமக்கு மகிழ்ச்சியே...
ஒரு மாற்றத்திற்க்கான முதல்முயற்சி...
நமக்கு மகிழ்ச்சியே...
ஒரு மாற்றத்திற்க்கான முதல்முயற்சி...
சிவ எம்கோ
தமிழாசிரியர்...
தமிழாசிரியர்...
இது மெல்லக் கற்கும் மாணவர்களை மனதில் கொள்ளாமல்.மீத்திறன் மாணவர்களை மனதில் வைத்து தயாரித்து உள்ளார். அவரது புலமையை வெளிக்காட்டும் இடம் இது அல்ல!
ReplyDeleteஇது மெல்லக் கற்கும் மாணவர்களை மனதில் கொள்ளாமல்.மீத்திறன் மாணவர்களை மனதில் வைத்து தயாரித்து உள்ளார். அவரது புலமையை வெளிக்காட்டும் இடம் இது அல்ல!
ReplyDeleteஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புவரை ஒரு நாள் வகுப்புக்கு வ ந்தாலும் தேர்ச்சி! பத்தாம் வகுப்பு
ReplyDeleteவ ந்தவுடன் சிந்தனையைத் தூண்டும் வினா? , நல்லா இருக்கே உங்கள் நியாயம்
மிகவும் சரியாக கூறினீர்.. மாற்றத்தை வரவேற்போம்..கல்வியின் தரம் கூடட்டும்..
ReplyDeleteஒரு வினாத்தாள் இப்படித்தான் இருக்க வேண்டும்.
ReplyDeleteமெல்லக் கற்கும் மாணவர்கள் என்று ஒரு பிரிவினைக் கூறியே தரத்தினைக் குறைக்கக் கூடாது. மெல்லக்கற்கும் மாணவருக்கும் ஓராண்டு காலத்திற்குள் தேர்ச்சியை அடையும் வகையில் கற்பிக்க வேண்டியது அவசியம். ஆரம்ப வகுப்பு முதலே மொழித்திறன்களை வளர்க்க வேண்டும். அதைவிடுத்து மொழிப்பாடத்தையும் பிற பாடங்களைப்போல வினாவிடை படிக்கச் செய்தால் மாணவன் என்ன செய்வான்? மொழித்திறன்கள் எப்போது வளரும்?
மொழித்திறனற்ற மாணவன் எல்லாப்பாடத்திலும் பின்தங்கியே காணப்படுவான். சுருங்கச்சொன்னால் இந்த வினாத்தாள் தரமானது. அதற்கேற்பக் கற்பித்தல் முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவோம். புதியபாடநூல்கள் அதற்கு வழிகாட்டும். மாற்றங்களை நோக்கி முன்னேறிச்செல்வோம்.