பார்தி ஏர்டெல், இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனம் என்கிற பெயரை மீண்டும் அடையும் வரை ஓயாது என்பது போல் தெரிகிறது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிரான பல வகையான ரீசார்ஜ் திட்டங்களை, தொடர்ச்சியான முறையின்கீழ் அறிமுகம் செய்யும் ஏர்டெல் இன்று அதன் ரூ.65/- மதிப்பிலான ப்ரீபெயிட் திட்டமொன்றை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன.? செல்லுபடியகும் என்ன.? என்பதை பற்றியும், ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் இதர சிறப்பான ரீசார்ஜ் திட்டங்களை பற்றியும் விரிவாக காண்போம்.
செல்லுபடியாகும் காலம்.?
அறிமுகமாகியுள்ள ரூ.65/- திட்டமானது, 1ஜிபி அளவிலான 3ஜி / 2ஜி டேட்டாவை வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். இதற்கு முன்னதாக அறிமுகமான ஏர்டெல் ரூ.49/- திட்டமானது வெறும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் என்கிற செல்லுபயை ,மட்டுமே கொண்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
ரூ.65 மற்றும் ரூ.98/- ஒப்பீடு.!
1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ரூ.65/-ஐ போன்றே, மொத்தம் 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும் ரூ.98/- ஆனது ஏர்டெல் நிறுவத்தின் சில பயனர்களுக்கு அணுக கிடைக்கிறது. ஆக ரூ.65/- மீது விருப்பம் உள்ள வடிக்கையாளர்கள், ஒருமுறை ரூ.98/- கிடைக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ளவும்.
ரூ.98/-ன் வழியாக 5 ஜிபி டேட்டா.!
ரூ.98/- மற்றும் ரூ.65/- என்கிற இரண்டு திட்டங்களும் 28 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்தை கொண்டிருந்தாலும் கூட, ரூ.65/- ஆனது 3கி/ 2ஜி டேட்டாவையும், ரூ.98/- ஆனது 4ஜி டேட்டாவையும் வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனர்களுக்கு, ரூ.98/-ன் வழியாக 5 ஜிபி டேட்டா கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்-ஆன் திட்டங்கள் என்றால் என்ன.?
மேலும் ஏர்டெல் நிறுவனத்திடம் ரூ.49, ரூ.98 மற்றும் ரூ.193/- போன்ற ஏர்டெல் ஆட்-ஆன் திட்டங்களும் உள்ளன. இவைகள் ஏற்கனவே நிலுவையில் இருக்கும் உங்களின் பிரதான காம்போ திட்டங்களின் டேட்டா நன்மையை அதிகரிக்க உதவும் திட்டங்களாகும். எடுத்துக்காட்டிற்கு, நீங்கள் நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா பெறுகிறீர்கள் எனில், ரூ.193/- என்கிற ஆட்-ஆன் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய, கூடுதலாக 1ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம். இந்த ஆட்-ஆன் திட்டங்கள், ஏற்கனவே நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு அணுக கிடைக்கிறது.

ஏர்டெல்-ன் சிறந்த காம்போ (வாய்ஸ் + டேட்டா) திட்டங்கள்.!
ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் சிறந்த காம்போ (வாய்ஸ் + டேட்டா) திட்டங்களை பொறுத்தமட்டில், ரூ.199, ரூ.349, ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.509/- ஆகியவற்றை குறிப்பிட்டு கூறலாம். ரூ.399/- ஆனது நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டாவை மொத்தம் 70 நாட்களுக்கு வழங்கும் மறுகையில் உள்ள ரூ.199, ரூ.349, ரூ.448 மற்றும் ரூ.509/- ஆகிய திட்டங்கள் நாள் ஒன்றிற்கு 1.4ஜிபி டேட்டாவை 28 நாட்கள் முதல் 91 நாட்கள் வரை செல்லுபடியாகும் காலத்தின் கீழ் வழங்கி வருகிறது.
அனைத்து ஐந்து திட்டங்களும்.!
டேட்டா நன்மைகளை தவிர்த்து, இந்த அனைத்து ஐந்து திட்டங்களும், செல்லுபடியாகும் காலம் வரையிலாகை, வரம்பற்ற வாய்ஸ் (எந்த தினசரி/ வார வரம்பும் இல்லாமல்) மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. மேலும் பல வகையான தொலைத்தொடர்பு அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெலிகாம் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...