☀ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறும்வரை சேவையை தொடர உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு மற்றும் டிராய் ஆகியவை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
☀செல்போன் டவர் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு வாடகை பாக்கி தராததால் ஏர்செல்லின் சுமார் 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்தன. இதனால் ஏர்செல் சேவை கடந்த சில தினங்களுக்கு முன் முடங்கியது. சுமார் 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை திருப்பி அளிப்பது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வர இயலாத சூழலில் உள்ள ஏர்செல் நிறுவனம், திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது.
☀இதையடுத்து, தனது வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறிக் கொள்ளுமாறு ஏர்செல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிர்த்து, சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர், உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஆதார், எரிவாயு சிலிண்டருக்கு மானியம் ஆகியவற்றுக்கு ஏர்செல் எண் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏர்செல் நிறுவனத்தின் திடீர் முடிவால், தமிழகத்தில் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வேறு நிறுவனங்களுக்கு மாறும்வரை தொடர்ந்து ஏர்செல் சேவையை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
☀இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, மத்திய அரசு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மற்றும் ஏர்செல் நிறுவனம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...