சென்னை
பல்கலைகழகம் தேர்வில் ஆள்மாற்றாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட 800
மாணவர்கள் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதித்துள்ளனர்.
முறைகேடு செய்த
மாணவர்கள் அனைவரும் மைசூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களில்
இயங்கிவந்த தொலைநிலை கல்வி மையங்கள் மூலம் பயின்றவர்கள் என்பது
தெரியவந்துள்ளது. விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்ததை மாணவர்கள்
ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து 800 பேரும் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத
தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 பேர் தேர்வெழுதியதில் 200 பேர்
மட்டுமே உண்மையாக தேர்வெழுதியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து
அவர்களது தேர்வு முடிவுகளை மட்டும் வெளியிட சென்னை பல்கலைகழகம் முடிவு
செய்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை,
முதுநிலை படிப்புகளுக்கான வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை
www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். தேர்வுத் தாள் மறுமதிப்பீடு
மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு ஆன்லைன் மூலம் 22ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...