ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியர் மன்ற பொது செயலாளருமான க.மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதுடன், பணி நிரந்தரம்
செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 21 மாத நிலுவை
தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள்
மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோருக்கு உள்ள ஊதிய முரன்பாடுகளை களைய
வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 21
முதல் 24ம் தேதி வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னையில் தொடர் சாலை மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 26ம் தேதி அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் இதுநாள் வரையில் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில், தற்போது தேர்வுகள் துவங்கியுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தினை தவிர்த்து வருகிறோம்.
இருப்பினும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் வரும் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்திட ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது. அதன் பிறகும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில் மே மாதம் 8ம் தேதி சென்னையில் கோட்டை முன்பாக முற்றுகை போராட்டம் நடத்திட முடிவு செய்துள்ளோம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...