தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவர்களின் சந்தேகங்கள்
மற்றும் குறைகளை தீர்க்க, 'ஹெல்ப்லைன்' சேவை நேற்று துவக்கப்பட்டது.தலைமை
செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இச்சேவையை முதல்வர் பழனிசாமி துவக்கி
வைத்தார்.
இந்த சேவைக்கான மையம், பள்ளிக்கல்வி துறையின் தலைமை
அலுவலகத்தில் இயங்குகிறது.இந்த மையத்திலிருந்து, எட்டு பேர், 24 மணி
நேரமும், கவுன்சிலிங் வழங்குவர்.இதற்காக, 14417 என்ற, கட்டணமில்லா தொலைபேசி
எண் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும்
மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள், கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் பேசி,
பள்ளிக்கல்வி குறித்த சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.நேற்று காலை, 9:00
மணிக்கு, ஹெல்ப்லைன் சேவை துவங்கிய நிலையில், மாலை, 5:00 மணி வரை, எட்டு
மணி நேரத்தில், 3,000க்கும் மேற்பட்டோரின் அழைப்புகள் பதிவானதாக, சேவையை
நிர்வகிக்கும், ஜி.வி.கே., - இ.எம்.ஆர்.ஐ., நிறுவன மண்டல மேலாளர்,
பிரபுதாஸ் தெரிவித்தார்.நேற்றைய அழைப்புகளில், பகல், 1:00 மணி வரை
பெரும்பாலும், பெற்றோரே போன் செய்து, சேவை பற்றி அறிந்தனர்.இடையிடையே
பட்டதாரிகள் மற்றும் கல்லுாரி மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம் மற்றும்
படிப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் குறித்த, சந்தேகங்களை
கேட்டனர்.பிற்பகலுக்கு பின், அதிக அளவில் பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள,
சேவை மையத்தை தொடர்பு கொண்டனர்.பலர், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும்
வழிகள்; தமிழ் இரண்டாம் தாளில், சிக்கலான கேள்விகளை அணுகுவது எப்படி; 10ம்
வகுப்புக்கு பின், எந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம் என்பது போன்ற
கேள்விகளை முன் வைத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...