ரயில் நிலைய கவுன்டரில், டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு,
5 சதவீதம் கட்டண சலுகை, ஏப்., 2 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்களில், 'டிஜிட்டல்' முறையில், யு.பி.ஐ., வசதியில் பணப் பரிமாற்றம் செய்து, டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, அடிப்படை கட்டணத்தில் இருந்து, 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த, ரயில்வே முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம், ஏப்., 2 முதல், மூன்று மாதத்துக்கு சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு மைங்களில் மட்டுமே இத்திட்டம் செல்லுபடியாகும். இத்திட்டத்தில் சலுகை பெற வேண்டுமானால், டிக்கெட் கட்டணம், 100 ரூபாய்க்கு அதிகமாக இருக்க வேண்டும். மேலும், அதிகபட்சமாக, 50 ரூபாய் வரை மட்டுமே சலுகை பெற முடியும். மாதாந்திர சீசன் டிக்கெட் எடுப்பவர்களுக்கும், இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கும், இத்திட்டம் பொருந்தாதென, ரயில்வே அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...