ராணுவத்தில்
5 ஆண்டுகள் கட்டாயமாக பணியாற்றியவர்களுக்கே மத்திய அரசு அல்லது மாநில
அரசுகள் வேலை வழங்க வேண்டும் என பார்லி. நிலைக்குழு தனது பரிந்துரையில்
தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
முப்படை எனப்படும் ராணுவம், கப்பற்படை, விமானப்படையில் நாளுக்கு நாள் வீரர்கள், ஊழியர்கள் பற்றாகுறை நிலவி வருகிறது. இதனை சரிக்கட்ட பாதுகாப்புத்துறை தொடர்பான பார்லி. நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: , ''இந்திய ராணுவத்தில் 7,679 அதிகாரிகள் , 20,185 வீரர்கள் ,விமானப்படையில் 146 அதிகாரிகள், 15,357 வீரர்கள் , கடற்படையில் 1,434 அதிகாரிகள், 14,730 ஆயிரம் வீரர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
இப்பற்றாக்குறையை சமாளிக்க இனிவரும் காலங்களில் அரசு வேலையில் சேர விரும்புவர்கள் அனைவரும் 5 ஆண்டுகள் ராணுவத்தில் கட்டாயம் சேவை செய்து இருக்க வேண்டும் என்று விதியை நடைமுறைப்படுத்த வேண்டும்'' அவ்வாறு 5 ஆண்டுகள் சேவை செய்து இருப்பவர்களுக்கு மட்டுமே அரசு பணியில்முன்னுரிமை வழங்க வேண்டும். இதனை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கவனிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தினால் சிறப்பாக இருக்கும்.
ReplyDelete