சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹுவாய் 512 GB ஸ்டோரேஜ் கொண்டு புதிய மாடலை வடிவமைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சீன போன்கள் என்றாலே போலியானவை என்ற கருத்துக்கள் மாற்றமடைந்து பல நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதில் ஹுவாய் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் p10 என்ற மாடல் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் புதிய மாடல் குறித்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டு புதிய மாடலை ஹுவாய் நிறுவனம் வடிவமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பயனர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக சாம்சங் நிறுவனம் நிறுவனம் 512GB ஸ்டோரேஜ் கொண்டு ஒரு மாடலை தயாரித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. ஹுவாய் நிறுவனம் இந்த புதிய மாடலில் 40 MP கேமரா வசதியை சோதனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. லேப்டாப்களின் ஸ்டோரேஜ்ஜிற்கு இணையாக இந்த புதிய மாடல்களில் ஸ்டோரேஜ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது போல், ப்ராசெஸ்சர் மற்றும் திரையளவும் சரியே அமையும் பட்சத்தில் லேப்டாப்களை அதிகம் பயனர்கள் வாங்குவதை விடுத்து இதுபோன்ற மாடல்களை வாங்கிச்சென்றுவிடுவர்.
ஹுவாய் நிறுவனத்தின் புதிய மாடல் குறித்து வேறெந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் இந்த மாடல் குறித்த பிற தகவல்களை ஹுவாய் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...