இப்போது சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகப்படுத்தும்
வண்ணம் உள்ளது, அதன்படி மார்ச் 7-ம் தேதி இந்தியா குறிப்பிட்ட சியோமி
ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் மி.காம்
(Mi.com)தளத்தில் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி மி டிவி 4சி
43-இன்ச் சாதனத்தின் விலை மதிப்பு ரூ.27,999-எனத் தகவல்கள்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது
இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.
மி டிவி 4சி 43-இன்ச் சாதனத்திற்கு 15% தள்ளுபடி வழங்கப்படும் என்று அந்த
மி.காம் தளத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம்
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
எப்எச்டி டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மி டிவி 4சி 43-இன்ச் சாதனம் பொதுவாக வைபை, ப்ளூடூத் 4.2 மற்றும் டால்பி
மற்றும் டிடிஎஸ் ஆடியோ போன்ற அம்சங்களை கொண்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு
பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
குவாட்-கோர் 64-gpl & HLG மற்றும் HDR 10-ஐ ஆதரிக்கும் Amlogic T962
செயலியைக் கொண்டுள்ளது இந்த மி டிவி 4சி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி. மேலும்
இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சாதனம்.
சியோமி மி டிவி 4ஏ மாடல் பொறுத்தவரை 32-இன்ச் 1366x768 பிக்சல் எச்டி
டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர்
அம்லாஜிக் 962-எஸ்எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர் - மாலி-450 எம்பி3 ஜிபியு
செயலிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வைபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0, ஈத்தர்நெட், போன்ற பல்வேறு இணைப்பு
ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 2 ஒ 5 வாட் ஸ்பீக்கர், டால்பி
விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட், DTS மற்றும் பாஸ் பூஸ்ட்வசதிகள் கொண்டுள்ளது
சியோமி மி டிவி 4ஏ மாடல்.
MIUI டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால் அம்சங்கள் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பித்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை
கொண்டுள்ளன சியோமி ஸ்மார்ட் டிவி.
சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் வந்த தகவலின்
அடிப்படையில் 32-இன்ச் மி டிவி 4ஏ மாடலின் விலை ரூ.12,990 என நிர்ணயம்
செய்யப்பட்டிருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...