தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்போதிருக்கும் மருத்துவ மாணவ சேர்க்கை இடங்களில் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி தொடர்பான அறிவிப்புகள்:
உயர்கல்வித் துறைக்கு ரு.4,620 கோடி நிதி ஒதுக்கீடு.
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள பாரம்பரியக் கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்.
குமரி, நெல்லை, மதுரை, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவ சேர்க்கை இடங்கள் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும்.
தமிழகத்தில் உள்ள 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உயிரி இயந்திரவியல் சிறப்பு மையத்துக்கு ரூ.13.12 கோடி ஒதுக்கீடு.
இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு.
குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கீடு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...