மதுரையில் மூன்று கோடி ரூபாயில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கான இடம் நான்காவது முறையாக மாற்றம் செய்யப்பட்டது.
வெளி மாவட்ட ஆசிரியர், அதிகாரிகள் நலன்கருதி முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சட்டசபையில் 110 விதியின் கீழ்'கோவை, திருச்சி, மதுரையில் தலா 3 கோடி ரூபாயில் ஆசிரியர் இல்லங்கள் கட்டப்படும்,' என அறிவித்தார்.
கோவையில் இல்லம் பயன்பாட்டிற்கு வந்தது.திருச்சியில் பணி முடிவுற்றது. மதுரையில் இடம் கூட தேர்வு செய்யவில்லை. முதலில் புதுதாமரைப்பட்டி தேர்வு செய்யப்பட்டது. உயர் அதிகாரிகள் திருப்தி அடையாததால் ரத்து செய்யப்பட்டது. பின் ஒத்தக்கடையில் ஆய்வு நடந்தது. ஆனால் ஜெய்ஹிந்புரம் மார்க்கெட் அருகேகட்ட முடிவானது. இடம் பற்றாக்குறையால் பொதுப்பணித்துறை மறுத்தது.பின் அவனியாபுரம் அரசு பள்ளி வளாகத்தில் கட்ட முடிவாகி வரைவு திட்டமும் தயாரானது.
பொது பணித்துறையும் டெண்டர் வெளியிட இருந்தது. இந்நிலையில் இல்லம் விவரம் வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் கவனத்திற்கு தெரியவந்தது. 'நகருக்குள் அமைந்தால்தான் பயனுள்ளதாக இருக்கும்,' என தெரிவித்தார். இதனால் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் அருகே ஒரு ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...