தேர்வுத் துறை அதிகாரிகள் தமது பொறுப்பை உணர்ந்து விழிப்புடன் செயல்படாவிட்டால்,
துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நடப்பு ஆண்டுக்கான மேல்நிலைத் தேர்வுகள் கடந்த 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. 2,794 மையங்களில் தேர்வுகள் நடக்கின்றன.இந்நிலையில், தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், தாளாளர், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் பள்ளி வளாகத்துக்குள், காலை 8.30 மணிக்கு மேல் செல்லக்கூடாது என்று மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது.அவ்வாறு செல்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தின் அனுமதி நிரந்தரமாக ரத்து செய்யப்படும். அத்துடன், பள்ளி அங்கீகாரத்தையும் ரத்து செய்ய துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், அந்தநேரத்தில் தேர்வு மையத்தில் தேர்வுப் பணியில் உள்ள முதன்மை கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர், காவலர் ஆகியோர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.தேர்வர்கள் தேர்வு அறைக்குள் செல்லும்போது துண்டுத்தாள்கள், விடைக்குறிப்புகள் போன்றவற்றைக் கொண்டு செல்லக்கூடாது. அவை எடுத்துச் செல்லப்படுவது பறக்கும்படை மற்றும் ஆய்வு அலுவலர்களால் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அறைக் கண்காணிப்பாளர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.எனவே, அறை கண்காணிப்பாளர்கள் தேர்வர்களைத் தேர்வு அறைக்குள் அனுமதிக்கும் முன்னரே முழுமையாக சோதனை செய்து அனுமதிக்குமாறு மீண் டும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், காவல்துறையைச் சேர்ந்த காவலர், முதன்மைக் கண்காணிப்பாளரின் அனுமதி இல்லாமல் வெளியாட்களை தேர்வு மையத்தினுள் அனுமதிக்கக்கூடாது.எனவே, தேர்வுப் பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர், அறைக் கண்காணிப்பாளர், காவ லர் ஆகியோர் தமது பொறுப்பினை உணர்ந்து விழிப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
கல்லூரிகளில் பின்பற்றப்படும் semester முறையை +1 +2 மாணவர்களுக்கு பின்பற்றினால் மாணவர்கள் எளிதாக NEET EXAM ல் வெற்றி பெறலாம்
ReplyDeleteஇவன்
ஆசிரியர்
கல்லூரிகளில் பின்பற்றப்படும் semester முறையை +1 +2 மாணவர்களுக்கு பின்பற்றினால் மாணவர்கள் எளிதாக NEET EXAM ல் வெற்றி பெறலாம்
ReplyDeleteஇவன்
ஆசிரியர்