தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பள்ளிக்கல்வி இயக்குநரை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுச்செயலாளர் மனோகரன் கூறியதாவது:
விடைத்தாள் திருத்தும் பணியை கோடைகால விடுமுறையில் நீட்டிக்கக் கூடாது எனவும், கோடைகால விடுமுறையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதுதொடர்பாக தேர்வுத்துறையை அணுகியபோது விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.11ல் தொடங்கி மே20 வரை நீடிக்கும். இந்த கால அட்டவணையில் மாற்றம் இல்லை என தெரிவித்தனர்.
எனவே மே 1ம் தேதிக்கு மேல் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்போம் என்ற எங்கள் நிலையை தெளிவாக தெரிவித்துள்ளோம் என்றார்.பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே மாதம் 2வது வாரத்தில் வெளியிடப்படுவது வழக்கம். தற்போது மே 1ம் தேதிக்கு பிறகு விடைத்தாள் திருத்த மாட்டோம் என ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் குறித்த காலத்தில் பிளஸ்2 முடிவுகள் வெளியாகுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...