பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வுகள் பொதுவாக கடினமாக இருப்பதாக ஆசிரியர்களும், மாணவர்களும் கருத்து தெரிவித்தனர்.
11-ம் வகுப்புக்கு இந்த ஆண்டிலிருந்து மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு மார்ச் 16-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் தேர்வில் முதல் தாள் எளிதாகவும் 2-ம் தாள் சற்று கடினமாகவும் இருந்தது. அதேபோல், ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்தது. தனியார் பள்ளி மாணவ - மாணவிகள் தேர்வு எளிதாகக் கருதினாலும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள் தேர்வை கடினமாகக் கருதினர்.இந்த நிலையில், ஆங்கிலம் 2-வது தாள் தேர்வு நேற்று நடந்தது. முதல் தாளுடன் ஒப்பிடும்போது 2-வது தாள் சற்று எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ - மாணவிகள் கூறினர். தற்போது பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சிபொதுத்தேர்வை எழுதினாலும், வினாத்தாள் முறைமுற்றிலும் வேறுமாதிரியாக மாற்றப்பட்டுள்ளது.
புளு பிரிண்ட் முறை
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புளு பிரிண்ட் முறையிலே பொதுத்தேர்வில் வினாக்கள் கேட்கப்படும். அதன்படி, குறிப்பிட்ட பாடப்பகுதியில் எத்தனை மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்பது மாணவர்களுக்கு முன்பே தெரியும். எனவே, அவர்கள் குறிப்பிட்ட பாடப்பகுதிகளைப்படிக்காமல் விட்டுவிட முடியும். ஆனால், பிளஸ் 1 பொதுத்தேர்வில் புளு பிரிண்ட் முறைகிடையாது.எந்தப் பகுதியில் இருந்தும் எத்தனை மதிப்பெண்ணுக்கு வேண்டுமானாலும் கேள்விகள்கேட்கப்படலாம். எனவே, பிடிக்காத பாடப்பிரிவுகள் என்று மாணவர்கள் எதையும் படிக்காமல் விட்டுவிட முடியாது.
தமிழ், ஆங்கிலம் இரு தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ் 1 தேர்வு பொதுவாக சற்று கடினமாக இருப்பதாகவே மாணவர்களும் ஆசிரியர்களும் கருதுகின்றனர். முதல்முறையாக பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் விடைத்தாள் மதிப்பீட்டில்சற்று தாராளம் காட்டப்படுமா என்று பிளஸ் 1 மாணவ - மாணவிகள் எதிர்பார்க்கிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...