ஏர்செல் நிறுவனம் திவால் நோட்டீஸ் அளித்துவிட்டதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 10 லட்சம் பேர் வோடபோன் நிறுவனத்துக்கு மாறிவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான கடன் நெருக்கடி காரணமாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தேசிய கடன் தீர்ப்பாயத்தில் திவால் மனுத் தாக்கல் செய்தது. இதை அந்த தீர்ப்பாயமும் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கு நிறுவனமான டிராய் கால அவகாசம் அளித்தது.இதில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் செல்போன் எண்ணை போர்டல் முறையில் பிஎஸ்என்எல், ஏர்டெல் நிறுவனத்துக்கு மாறினர். இந்நிலையில், தமிழகத்தில் 4ஜி நெட்வொர்க்கை மேம்படுத்த வோடபோன் நிறுவனம் தீவிரப்படுத்தி வருகிறது.இதற்காக ரூ.400 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.
இதனால், ஏர்செல் நிறுவனத்தின் திவால் அறிவிப்புக்குப் பின், வோடவோன் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 10 லட்சம் பேர் மாறியுள்ளதாக வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஏர்செல் வாடிக்கையாளர்கள் நாள்தோறும் அதிகமான எண்ணிக்கையில் வந்து கொண்டு இருப்பதால், அவர்களுக்கு சேவை எளிதாகவும், தங்குதடையின்றி கிடைக்கும் வகையில், வோடபோன் சில்லரை வர்த்தக மையங்களை வாரத்தின் 7 நாட்களும் திறந்துவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...