நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில்
ஆண்டுவிழாவின் போது அதிக திறன் கொண்ட மின் விளக்குகள் பயன்படுத்தியதால்
50க்கும் மேற்கட்ட மாணவ, மாணவிகளுக்கு கண்ணில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவர்கள் திருநெல்வேலி தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்து தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற
ஆண்டுவிழாவில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தியுள்ளனர்.
மின்விளக்குகளிலிருந்து வெளிவந்த கதிர்வீச்சுகள் காரணமாக மாணவர்கள்,
ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட விழாவில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் கண்
எரிச்சல் ஏற்பட்டுள்ளது. விழா முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் கண்
எரிச்சல் அதிகமானமானதால், இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு ஆரம்பகட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய கண் மருத்துவர், மாணவர்களுக்கு பயப்படும் வகையில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார். அதிக திறன் கொண்ட ஹாலஜன் விளக்கின் கேஸ் கசிவு காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் எரிச்சல்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. கண் எரிச்சல் சரி ஆகாதவர்களுக்கு அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்பட்டும் என்று தகவல் அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், கவனகுறைவாக செயல்படுதல், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள், பள்ளி நிர்வாகிகள் மீதும் ஏர்வாடி காவல்நிலையத்தில் முதற்கட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆறுதல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ஆட்சியர், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று கூறியுள்ளார். மாணவர்கள் நலமுடன் உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு கண் மருத்துவர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Annual day should be celebrated in day time only.so no need for lighting facility and students go home safely.please consider.
ReplyDelete