பத்தாம் வகுப்பு, தமிழ் முதல் தாள் தேர்வில், கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டதாலும், 27 மதிப்பெண்களுக்கு சிந்திக்க வைக்கும் கேள்விகள் இடம் பெற்றதாலும், மாணவர்கள் பதில் அளிக்க தடுமாறினர்.
10ம் வகுப்பு,தமிழ்,கடினம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு நேற்று துவங்கி யது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,900 மையங்களில், 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஒவ்வொரு பொது தேர்விலும், தமிழ் முதல் தாள், எப்போதும் எளிதாகவே இருக்கும். ஆனால், நேற்று தமிழ் முதல் நாள் தேர்வில், கடினமான வினாத்தாள், மாணவர்களை தடுமாற வைத்தது.
நேரமில்லை
பாட புத்தகம் மற்றும், 'ப்ளூ பிரின்ட்' அடிப்படையில் மட்டுமே, கேள்விகள் இடம் பெற்றன. ஆனால், கேள்வியை கேட்ட
முறையில், மாணவர்கள் சோதனைக்கு ஆளாகினர். தேர்வு முடித்து வந்த பல மாணவர்கள், '100 மதிப்பெண்ணுக்கு எழுதினாலும், 70 மதிப்பெண்ணே கிடைக்கும்' என்றனர். சிலர், 'வினாவை புரிந்து எழுத, போதிய நேரம் இல்லை; சில கேள்விகள் பாடத்தில் இடம் பெற்று உள்ளதா என்பதே சந்தேக மாக உள்ளது'என்றனர். மற்றவர்களோ, 'பாடத்தை முழுமையாக படித்ததால், அனைத்து வினாக்களுக் கும் பதில் எழுத முடிந்தது' என்றனர். இப்படி, பல்வேறு வகை கருத்துக்களை மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வினாத்தாள் குறித்து, கே.ஆர். மேல்நிலைப்பள்ளி, தமிழ் ஆசிரியர், நீ.இளங்கோ கூறியதாவது:பத்தாம் வகுப்பு தமிழ் வினாத்தாள், தரமான கேள்விகளை உள்ளடக்கியதாக இருந்தது. குறிப்பாக, போட்டி தேர்வு எழுத, மாணவர்களை தயார் செய்வது போன்ற கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
கடினம்
இதை, கடினமான வினாத்தாள் என, நினைக்காமல், இது போன்ற வினாத்தாள்களை அனைத்து வகுப்பு களுக்கும்உருவாக்க வேண்டும்.கடினமான வினாக் களையும் எதிர்கொள்ளும் வகையில், மாணவர் களுக்கு பாடங்களை விரிவாக கற்றுத்தர வேண்டும். வெறும் மனப்பாட கல்வி, வரும் காலத்தில் பலன் அளிக்காது என்பதை உணர்ந்து, இந்த வினாத்தாள்
அமைக்கப்பட்டுள்ளது.ஒரு மதிப்பெண்ணில், 3, 4, 7, 8 மற்றும், 16 ஆகிய கேள்விகள், பாடத்தின் உள்பகுதிகளில் இருந்து கேட்கப்பட்டிருந்தன.
இரண்டு மதிப்பெண்களில், 26, 29, 31, 32 மற்றும், 34 ஆகிய கேள்விகளும், நான்கு மதிப்பெண் களில், 36, 38 மற்றும், 39 ஆகிய கேள்விகளும், மாணவர்களின் சிந்தனை திறனை சோதிக்கும் வகையில் இருந்தன. பாடத்தின் பின்பக்க கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளன.
மாறாக, செய்யுள், உரைநடை ஆகியவற்றில், ஆசிரியர் குறிப்பு, நுால் குறிப்பு ஆகியவற்றில் இருந்து, அதிக கேள்விகள் இடம் பெற்றன. புத்தகத்தை புரிந்து படித்திருந்தால், இந்த தேர்வில் முழு மதிப்பெண்ணை பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
சாதாரண மாணவர்களுக்கு நீங்கள் கூறியது மிகச் சரியானதே.
ReplyDeleteஆனால் மாற்றுத்திறனாளி மாணவர்களின் ( காதுகேளாதோர் , மனவளர்ச்சி குன்றியார், கற்றல் குறைபாடுடையோர்) நிலை அந்தோ! பரிதாபத்திற்குரியது.
புத்தகத்தின் பின்புறம் உள்ள வினாக்களை மட்டுமே படிப்பதால் வரும் விளைவு இது. புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும்.இதனால் தான் நீட் போன்ற போட்டித்தேர்வுகளில் நாம் தடுமாறுகிறோம்.
ReplyDeleteபுத்தகத்தின் பின்புறம் உள்ள வினாக்களை மட்டுமே படிப்பதால் வரும் விளைவு இது. புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும்.இதனால் தான் நீட் போன்ற போட்டித்தேர்வுகளில் நாம் தடுமாறுகிறோம்.
ReplyDeleteபுத்தகத்தின் பின்புறம் உள்ள வினாக்களை மட்டுமே படிப்பதால் வரும் விளைவு இது. புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும்.இதனால் தான் நீட் போன்ற போட்டித்தேர்வுகளில் நாம் தடுமாறுகிறோம்.
ReplyDeleteQuestion paper is too hard
ReplyDeleteQuestion paper is too hard
ReplyDeleteQuestion paper was easy.
ReplyDelete