Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு

டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4 பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால்  டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் நேற்று காலை 10 மணி முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள்,  பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் என 4 பிரிவினராக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அவர்கள்  ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தனித்தனிக் குழுக்களாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு  குவிக்கப்படனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வை 2013ம் ஆண்டு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு கூட்டமைப்பாக கோஷம் போட்டபடி வந்தனர். அவர்கள் ஆசிரியர் தேர்வு  வாரிய தலைவரை சந்திக்க காத்திருந்தனர். அது குறித்து அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 93 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். 5 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்னும் பணி நியமனம்  இல்லை. 
பள்ளிக் கல்வி அமைச்சர் விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று ஜனவரி மாதம் தெரிவித்தார். தொடக்க கல்வித்துறை, பள்ளிக்  கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இல்லை என்றால், சட்டப் பேரவையை  முற்றுகையிடுவோம் என்றார்.
அடுத்ததாக 2017ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் சார்பில் நடத்த முற்றுகை போராட்டத்தில்  சென்னையை சேர்ந்த வெங்கட் கூறியதாவது:
கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி–்த் தேர்வில் தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் எழுதினர். அதில் 34 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பணி  ஆணை கிடைக்கும் என்று காத்திருக்கிறோம்.ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதிச் சான்று வழங்க வேண்டும். தாள் ஒன்றுக்கு சான்று சரிபார்ப்பு நடத்த வேண்டும் என்று  கேட்டு பள்ளிக் கல்வி இயக்குநரை சந்திக்க வந்தோம். அவரை சந்தித்த பிறகு ஒரு மாதம் காத்திருக்க சொன்னார் என்றார். 
சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதியவர்கள் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர்களுக்கான 1325 இடங்களை  நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி போட்டித் தேர்வு  நடந்தது. அதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினோம். 
தேர்வு முடிந்து 6 மாதம் கடந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை.  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய உதவி பேராசிரியர் போட்டித் தேர்வில் குளறுபடிகள் நடந்ததால், சிறப்பு ஆசிரியர் தேர்வில் இடம் பெற்ற ஓஎம்ஆர்  தாளை மீண்டும் திருத்த முடிவு செய்துள்ளோம். விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஆர்பி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால்  முடிவுகள் வெளிவரும் காத்திருப்போம் என்று செல்வம் தெரிவித்தார். 
முதுநிலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வு எழுதி பணி நியமனத்துக்காக காத்திருப்ேபார் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 3300 நிரப்ப போட்டித் தேர்வு நடந்தது. அதில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து 2300 பேருக்கு பணி  நியமனம் வழங்கப்பட்டுவிட்டது. 
மீதம் உள்ளவர்களுக்கு சான்று சரிபார்–்ப்பு முடிந்துள்ள நிலையில் பணி நியமன ஆணை இன்னும் வழங்கவில்லை.  ஆதிதிராவிடர் நலத்துறையில் 220 பணியிடங்கள் உள்ள நிலையில் அந்த இடங்களில் எங்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள  வந்தோம். விரைவில் முடிவு தெரிவிப்பதாக டிஆர்பி அதிகாரிகள் ெ தரிவித்துள்ளனர். அதனால் முதுநிலை பட்டதாரி ஆசிரியரகள் கலைந்து  சென்றனர்.
போலீசாரை வெளியே நிற்க வைத்த அதிகாரிகள்மேற்கண்ட நான்கு பிரிவினரும் டிஆர்பி அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டு இருந்ததால் நுங்கம்பாக்கம் போலீசார் அங்கு வந்தனர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி உரிய அதிகாரிகளிடம் பேச ஏற்பாடு செய்தனர். ஆனால் டிஆர்பியின் தலைவர் நந்தகுமாரிடம் பேச வேண்டும்  என்று போராட்டக் காரர்கள் கேட்டுக் கொண்டனர்.இது குறித்து டிஆர்பி தலைவருக்கு தகவல் தெரிவிக்க சென்ற போலீஸ் அதிகாரிகளை உள்ளே விடாமல் ெவளியில் காக்க வைத்தனர் டிஆர்பி  அதிகாரிகள். 
மேலும், டிஆர்பி  தலைவர் நந்தகுமார் முக்கியமான மீட்டிங்கில் இ ருப்பதால் அதிகாரி ஒருவர் பேச்சு வார்த்தை நடத்துவார் என்று  போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி டிஆர்பி உறுப்பினர் செயலாளர் உமாவை பேச அழைத்தனர். ஆனால் அவர் வழக்கம் போல மனுக்களை  வாங்கிக் கொண்டு பதில் கூறி அனுப்பி விட்டார். இது வழக்கமாக நடப்பதுதான். இவ்வளவு களேபரத்துக்கும் இடையிலும் தலைவர் நந்தகுமார் அவர்  அறையில் இருந்து வெளியில் வரவே இல்லை. அதனால் பட்டதாரிகள் அதிருப்தி அடைந்தனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive