Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு துவங்கியாச்சு சைக்கிள், 'லேப்டாப்' எப்போது வரும்?

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு துவங்கிய நிலையிலும் இதுவரை இலவச சைக்கிள், 'லேப்டாப்' வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு 2011--12 முதல் இலவச 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. இதற்காக 2017--18 க்கு 758 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதே போல் பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடக்கும் நிலையில், இதுவரை மாணவர்களுக்கு சைக்கிள், 'லேப்டாப்' வழங்கவில்லை.
மற்ற வகுப்புகளிலும் இலவச பாடப்புத்தகம், நோட்டுகள், சீருடைகள் தவிர, புவியியல் வரைபடம், புத்தகப்பை, கிரயான், வண்ணபென்சில், காலணி, கணித உபகரணப்பெட்டி போன்ற நலத்திட்டங்களும் வழங்கவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிந்துவிடும். தேர்வு முடிந்த பின் இப்பொருட்களை பெறுவது சிரமம். பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான நலத்திட்டங்கள் வழங்குவதாக தம்பட்டம் அடிக்கும் அரசு, அனைத்து பொருட்களையும் குறித்த காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இலவச சைக்கிள், 'லேப்டாப்' கொடுக்க மாணவர்கள் பட்டியலை தயாரித்து பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளோம். வந்ததும் மாணவர்களை வரவழைத்து கொடுத்து விடுவோம். பள்ளியை விட்டு சென்றாலும் மாணவர்களுக்கு வழங்கப்படும்,' என்றார்.




1 Comments:

  1. பி.எட் படித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
    பதிவு: ஜூலை 02, 2017 11:20

    மாற்றம்: ஜூலை 02, 2017 11:21

    பி.எட்., பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    பி.எட் படித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தமிழக அரசு மற்றும் அல்ட்ராடெக் சிமெண்டு நிறுவனம் இணைந்து தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி (அரக்கோணம்), என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைகுப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சு.ரமேஷ் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளி கல்வித்துறையில் தமிழக அரசு செய்துள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக கல்வியில் மாணவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள். அரசு பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து படிக்கும் நிலை உருவாகும். கல்வியில் செய்துள்ள மாற்றத்தால் அரசு பள்ளியில் இடம் கிடைக்காமல் போகும் நிலை வரும் காலங்களில் ஏற்படும்.

    ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் அரசு சார்பில் வாய்ப்புகள் வழங்கப்படும். அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கணினி அறிவியலில் தேர்ச்சி பெற்று பி.எட்., பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கல்வித்துறையில் செய்துள்ள மாற்றத்தால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒரு வருடம் ஓடி விட்டது ஆனால் இன்னும் எந்த ஒரு பி.எட் கணினி பட்டதாரிக்கும் அரசு வேலை வழங்கவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive