மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை
முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும்.
உறவினர்கள், நண்பர்களுடன்
உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தவர்களை குறைக்
கூறுவதை நிறுத்துங்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என
ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும்.
உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் விமர்சித்து
பேச வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர்
பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.
உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
மிதுனம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிட்டும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
கடகம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர், நண்பர்கள்
எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை
ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது
இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப்
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு
வரும். நட்பு வட்டம் விரியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை
ஒப்படைப்பார்கள். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். வியாபாரத்தில்
வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி
வரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
கன்னி
சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை
பல முறை அலைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம்.
உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட
வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில்
அதிகாரிகள் குறைக் கூறுவார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
துலாம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில்
ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள்.
வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள்
உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
விருச்சிகம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப
உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரம்
செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
தனுசு
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை
கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள்
அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
மகரம்
பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாய்வழி உறவினர்களுடன்
கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்
உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான
செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
கும்பம்
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை
மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின்
நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில்
உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
கும்பம்
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை
மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின்
நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில்
உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...