Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு RTI பதில்கள்.

(i) உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு கட்டாயம் என்ற விதிமுறையானது தமிழகத்தில் எப்போது கட்டாயமாக்கப்படும்? மற்றும் (ii) முழு நேர முறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் நாட்களை கற்பித்தல் அனுபவமாக கருத்தில் கொள்ளப்படுமா?என்ற கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் உயர்கல்வி துறை வழங்கிய பதில்கள்.

கோரிய விவரங்கள்:
(i) பல்கலைக்கழக மானிய குழுவின் (UGC) சுற்றறிக்கை அறிவிப்பு எண்: No.F.1-2/2016(PS/Amendment) நாள்: 11th July, 2016 படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக (Assistant Professor) பணியாற்றிட குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்துள்ளது. அதன் படி ஜூலை 11, 2009 க்கு அடுத்து முனைவர் பட்டம் (Ph.D) பயில பதிவு செய்தவர்கள் கட்டாயமாக தேசிய அல்லது மாநில அளவிலான உதவி பேராசிரியருக்கான தகுதி (நெட்/செட்) தேர்வினை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது முனைவர் பட்டம் பெற்றாலும் நெட்/செட் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெறவேண்டும் அல்லது முதுகலை பட்ட படிப்பு (M.A/M.Sc/M.Com) உடன் நெட்/செட் தகுதி இருந்தால் போதும் என்று யுஜிசி (UGC) கூறியுள்ளது. இதன் அடிப்படையிலேயே மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பணி நியமணம் செய்யப்படுகிறது. இந்த நடைமுறையானது தமிழகத்தில் தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா? அல்லது எப்பொழுது கட்டாயமாக்கப்படும்? ஒரு சமயம் தாங்கள் இந்த தகவலை தெரிவிக்க இயலாது என்றால், யாரிடம் இதனை கேட்பது.
(ii) பல்கலைக்கழக மானிய குழுவானது முழு நேரம் முறையில் (Full-Time Mode) முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் (Research Experience) நாட்களை கற்பித்தல் அனுபவமாக (Teaching Experience) கருத்தில் கொள்கிறது. இந்த நடைமுறை தமிழகத்திலும் உள்ளதா? இந்த கணக்கீடானது உதவி பேராசிரியர் (Assistant Professor) நேர்காணலின் போது பொருந்துமா அல்லது இணை பேராசிரியர் (Associate Professor) நேர்காணலின் போது பொருந்துமா?
கடித எண் 19648/எப்.2/2017-1 நாள் 13.12.2017 வாயிலாக பெறப்பட்ட பதில்கள்
(i) அரசு கடித எண்.13792/எப்.2/2017-10 நாள். 13.01.2017 -ல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள் தெரிவு செய்வது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உரிய அறிவுறுத்துங்கள் வழங்கப்பட்டுள்ளன.

(ii) முழு நேரமுறையில் (Full Time Mode) முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் நாட்களை கற்பித்தல் அனுபவமாக எடுத்துக் கொள்வது குறித்து தமிழக அரசால் தனியே ஆணைகள் ஏதும் வெளியிடப்படவில்லை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive