ஆசிரிய நண்பர்களுக்கு.... ஒரு முக்கிய செய்தி
இந்த நிதியாண்டில் (2017-18) பிப்ரவரி'2018
மாதத்தில் சம்பள பட்டியலுடன் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் (DDO),
இங்கு பணிபுரியும் அனைவருக்கும் வருமான வரி கணக்கிட்டு, பிப்ரவரி மாத
ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது எனச் சான்று வழங்கினாலே போதும்
எனவும், IT படிவங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை எனவும் விருதுநகர் மாவட்ட
கருவூல அலுவலர் திரு.ஜே.மரிய ஜோசப் அவர்கள் வாய்மொழியாக நேற்று (07-02-2018) எங்களிடம் [ நான் (S.செந்தில்குமார்),
S. மனோகர்,
ப.ஆ.(கணிதம்), அமேநிப, தியாகராஜபுரம், P.செல்வக்குமார்,ப.ஆ.(கணிதம் &
பள்ளிப் பிரதிநிதி), அமேநிப, தியாகராஜபுரம், ஜாரட் ஜோஸ் ப.ஆ.(கணிதம்
& முன்னாள் வட்டப் பொறுப்பாளர், தநா உமேபபஆகழகம்) , அஉநிப, தெற்கூர்,
மற்றும் திரு. R.இராஜா மணி மு.க.ஆ. (வேதியியல் & TNPGTA விருதுநகர்
கல்வி மாவட்ட தலைமையிடத்துச் செயலர்) அமேநிப, தியாகராஜபுரம்] தெரிவித்தார்
அதாவது, IT படிவங்களை தலைமையாசிரிடம் கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆனால், கருவூலத்திற்கு தேவையில்லை
இவ்வார இறுதியில் , அனைத்து உதவி கருவூல அலுவலர்களுக்கும் கூட்டம் (meeting) நடத்தி விபரம் தெரிவிப்பதாகவும் உறுதி கூறினார்.
ஆகவே, தங்கள் பகுதி உதவிக்கருவூல அலுவலரோ ...?, DD0வோ...? மறுத்தால் , மாவட்டக் கருவூல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறினார்.
நட்புடன்
S.செந்தில்குமார் ப.ஆ.(கணிதம் & முன்னாள் மாவட்டச் செய்தி தொடர்பாளர், TNHHSSGTA, விருதுநகர் மாவட்டம்) அமேநிப, தியாகராஜபுரம் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...