நீட் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயத்திற்கு டெல்லி
உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தற்போது நீட் தேர்வு எழுத
குறைந்தபட்ச வயது வரம்பு 17-ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவு
மாணவர்களுக்கு 25-ஆகவும் உள்ளது.
அதேபோல் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், இதர
பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான வயது வரம்பு 30-ஆக
நிர்ணயிக்கப்பட்டது. மே 6-ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு
நீட் தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும் அதிகபட்ச வயது வரம்பு 25-ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை மாற்றி அமைக்கக் கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு சிபிஎஸ்இ நிர்ணயிக்கும் வயது வரம்பில் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஆனால் மனுதாரர்கள் தங்கள் மாநிலத்திற்குட்பட்ட உயர்நீதிமன்றங்களை அணுகலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வயது உச்சவரம்பிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...